சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
718   மதுராந்தகம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 292 - வாரியார் # 728 )  

குதிபாய்ந்தி ரத்தம்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான

குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
     கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
     கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
     கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத
உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
     றுங்க ருத்தை யென்று ...... தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
     ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
     பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
     மந்த னிற்பி றந்த ...... குமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
     றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
Easy Version:
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொளைத்தொக்கு
இந்த்ரி யக் குரம்பை
வினைகூர்தூர் குணபாண்டமுற்று
அகிலமெனக் கைக் கொண்டிளைத்து அயர்ந்து சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெட
பொற் கிண்கி ணிச்சதங்கை விதகீத
உபய அம்புயப் புணையையினி
பற்றுங்க ருத்தை யென்று தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளை
அடற்சக்ரந் தரித்த கொண்டல் மருகோனே
Add (additional) Audio/Video Link

குதிபாய்ந்தி ரத்தம் வடிதொளைத்தொக்கு ... குதித்துப் பாய்ந்து
ஓடும் ரத்தமானது வடிகின்ற தொளைகளை உடையதும், தோலை
உடையதும்
இந்த்ரி யக் குரம்பை ... ஐந்து பொறிகளை உடையதுமான இந்த
உடம்பு,
வினைகூர்தூர் குணபாண்டமுற்று ... வினை மிகுந்து நிரம்பியுள்ள
குணங்களுக்குப் பாத்திரமான இந்த உடம்புதான்
அகிலமெனக் கைக் கொண்டிளைத்து அயர்ந்து சுழலாதே ...
சகல செல்வமுமாகும் என்று மேற்கொண்டு, அதனால் இளைத்துச்
சோர்வுற்றுத் திரியாமல்,
உதிதாம்ப ரத்தை யுயிர்கெட ... மனத்திலே உதிக்கின்றதாகும்
பரம்பொருளை, ஆத்ம தத்துவம் நீங்க,
பொற் கிண்கி ணிச்சதங்கை விதகீத ... அழகிய கிண்கிணி,
சதங்கை ஆகியவை விதவிதமான கீதங்களை இசைக்கும்
உபய அம்புயப் புணையையினி ... இரண்டு தாமரையை ஒத்த உன்
திருவடிகளாம் தெப்பத்தை இனியாவது
பற்றுங்க ருத்தை யென்று தருவாயே ... பற்றிக் கொண்டு வாழும்
கருத்தை எனக்கு நீ எப்போது தருவாய்?
கதைசார்ங்க கட்கம் வளை ... கதை, சாரங்கம், வாள், பாஞ்சஜன்யம்
என்ற சங்கு,
அடற்சக்ரந் தரித்த கொண்டல் மருகோனே ... வலிமை வாய்ந்த
சுதர்

Similar songs:

718 - குதிபாய்ந்தி ரத்தம் (மதுராந்தகம்)

தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான

719 - சயில அங்கனைக்கு (மதுராந்தகம்)

தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான

Songs from this thalam மதுராந்தகம்

718 - குதிபாய்ந்தி ரத்தம்

719 - சயில அங்கனைக்கு

720 - மனைமாண்சுத ரான

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song